குவாத்ரோச்சி-வெள்ளை அறிக்கை கோரும் சுவாமி
சென்னை:குவாத்ரோச்சி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 1993ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் குவாத்ரோச்சியை கைது செய்தது முதல் தற்போதுஅர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டது வரையிலான நிகழ்வுகளை விளக்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அர்ஜென்டிாவில் குவாத்ரோச்சியைக் கைது செய்தது தொடர்பான தகவலை வெளியிடாதது குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குவாத்ரோச்சி கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய வெளியுறவு அமைச்சகமும், சிபிஐயும் திட்டமிட்டு மறைத்துள்ளன. இது வேண்டும் என்றேநடத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், குவாத்ரோச்சிக்கும் உள்ள நெருக்கமான உறவு முறை காரணமாகவே, அவரை தப்பிக்க வைக்கும் வகையில், அவரதுகைது குறித்த தகவலை மூடி மறைக்க மத்திய அரசு முயன்றுள்ளது என்று கூறியுள்ளார் சுவாமி.


Click it and Unblock the Notifications
