ஆண்களை மோசடி செய்த தம்பதிகள் கைது
சென்னை:இரண்டு சக்கர வாகனங்களில் தனியே வரும் ஆண்களை நூதன முறையில் மிரட்டி பணம், நகைகள், கிரடிட் கார்ட் ஆகியவற்றை பறித்த வந்ததம்பதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த வாசுதேவன் மகேஸ்வரன் (50) நகை ஆசாரியான இவர் 2 நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில்மொபட்டில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த போது ஒரு இளம்பெண் லிப்ட் கேட்டார்.
வாசுதேவன் அவரை ஏற்றிக்கொண்டு வந்தபோது திருமலைப்பிள்ளை சாலை வந்ததும் அந்த பெண் இறங்கிக் கொண்டார்.
அப்போது வேகமாக வந்த புல்லட் அவரகளை உரசியபடி நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர் வாசுதேவனின் மொபட்டில் இருந்துசாவியை எடுத்துக் கொண்டு, விபசார அழகியுடன் உனக்கென்ன தொடர்பு என பலக் கேள்விகளை கேட்டு நடங்கள் ஸ்டேஷனுக்கு என்றார்.
இதனால் ஆடிப்போன வாசுதேவன் அந்த பெண் யாரென எனக்கு தெரியாது எனக் கூறியும் அந்த நபர் விடவில்லை. போலீஸ் வழக்கு என்றுசென்றால் பெயர் ரிப்பேராகும். விபசார அழகியுடன் உல்லாசமாக இருந்ததாக பேப்பரில் போட்டோவுடன் செய்தி வரும். என்னை கவனியுங்கள்கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறேன் என்றார்.
உடனே வாசுதேவனிடமிருந்து 2 மோதிரம், ரூ. 2000 மற்றும் கிரடிட் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தனது புல்லட்டில் பறந்துசென்றுவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த வாசுதேவன் போலீசில் புகார் கொடுத்தார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து விசாரித்து பார்த்தில் விபசாரதடுப்பு பிரிவில் அப்படி ஒரு அதிகாரி இல்லையென தெரிய வந்தது.
இதையடுத்து அண்ணா மேம்பால் அருகே துணை கமிஷ்னர் பாஸ்கரன் உதவி கமிஷ்னர் சலேத்ராஜ், இன்ஸ்பெக்டர் காதர்மொய்தீன் ஆகியோரைகொண்ட தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாறுவேடத்தில் நின்றுருந்தனர்.
அப்போது வாசுதேவனிடம் லிப்ட் கேட்ட அந்த பெண் நின்றிருந்தார், அவளை மிரட்டி விசாரித்தனர்.
அப்போது அவள் கூறியாதவது,
நான் ராதிகா(27) அந்த நபர் என் கணவர்(27) அவருக்கு வேலை இல்லாததால் இதுப்போல் செய்தோம். அண்ணா மேம்பாலம் அருகே நிற்பேன்,தனியாக மொபட்டில் வரும் ஆண்களிடம் லிப்ட் கேட்பேன். அப்போது என் கணவர் வந்து என்னை விபசார அழகி என்று மிரட்டுவார்.இதுப்போல் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளோம். குடும்பத்தை நடத்தத்தான் இப்படி மோசடி செய்தோம் எனக் கூறினார்.
இவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுப்போல மோசடி வேலைகள் நடந்து வருகிறாதா எனவும் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications