தோழிகளுடன் குமரியில் தோழர்கள் ஜாலி!
நாகர்கோவில்:குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், கல்லூரி மாணவிகளுடன் உல்லாசம் அனுபவித்த கேரள மாநில கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் இருவர் போலீஸ்வேட்டையில் சிக்கினர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் விபச்சார வேட்டை நடந்து வருகிறது. நாகர்கோவில்,குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் உள்ள லாட்ஜுகளில், விபச்சார வேட்டை நடந்தது.
![]() |
இதில் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரே லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உள்பட 12 பேர் சிக்கினர். இதுதொடர்பாக லாட்ஜ்மேலாளர் அசோகன், ஊழியர் சந்திரன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைதான பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அசோகன்தான் புரோக்கர்கள் மூலமாக பெண்களைவிபச்சாரத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
பிடிபட்ட பெண்களில் ஸ்ரீகலா, ஷீபா ஆகியோர் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷீபா நெடுமாங்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர். அங்கு எம்.ஏ.படித்து வருகிறார். ஸ்ரீகலாவுக்கு சொந்த ஊர் தம்பானூர். இவர் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.
பார்ட் டைமாக இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக இருவரும் கதறி அழுதபடி கூறினர்.
கைதான ஆண்களில் சுரேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
லாட்ஜுகள் தவிர சில பகுதிகளில் வீடுகளிலும் கூட விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம்உள்ளிட்ட சில இடங்களில் சில வீடுகளில் விபச்சாரம் நடப்பதாக கூறப்படுவதால் அந்த வீடுகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.













Click it and Unblock the Notifications