ஹெல்மட்: அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு
சென்னை:இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும்என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜி ராஜன்பாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஹெல்மட்டைக் கட்டாயமாக்குவதால், சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூர் நீதிமன்றத்திற்குள் ஹெல்மட் அணிந்தபடி புகுந்த நான்கு பேர்ஒருவரைக் கொலை செய்தனர். ஹெல்மட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
எனவே ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்கினால், அனைத்து மாநகராட்சிகளிலும் கொலை, திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கும்.
மேலும் ஹெல்மட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினால், பின்புறம், இடது, வலதுபுறம் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாது.இதனால் கண்கள் கட்டப்பட்ட குதிரை போல வாகனதாரர்களின் நிலை மாறி விடும். விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
சென்னை நகரில் முக்கிய சாலைகளே குண்டும் குழியுமாக உள்ளன. இதில் விபத்து ஏற்பட்டு விழுந்தால் தலை மட்டும் அடிபடாது. மாறாக முதுகுப்பகுதியில் தண்டுவடம் பாதிக்கப்படும், வயிற்றில் பலத்த அடிபடும். வயிற்றில் அடிபட்டாலும் உயிர் போகும்.
எனவே முதலில் சாலைகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெல்மட் போட்டாலும் கூட கை, கால்களில் ஏற்படும் எலும்பு முறிவைசரி செய்ய முடியாது. தலைக் காயத்தால்தான் உயிர் போகும் என்று கூறுவது பொய்.
ஹெல்மட் அணிவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும், தலைவலி ஏற்படும். அதிக அளவில் வியர்வை தலையில் தேங்கி மயக்கமும் ஏற்படும்.எனவே ஹெல்மட் அணிவதால் வேறு வகையான விபத்துக்களுக்கும் வாய்ப்புண்டு.
மேலும், வாகனங்களை ஓட்டுவோர் மட்டுமல்லாது, உடன் வருபவர்களும் அணிய வேண்டும் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது.கணவன், மனைவி, 2 பிள்ளைகளுடன் சென்றால் 4 ஹெல்மட் தேவை. இது பொருளாதார சூழலுக்கு ஏற்புடையதுதானா?
எனவே அரசின் கட்டாய ஹெல்மட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசே அனைவருக்கும் இலவசமாக ஹெல்மட் வழங்கிஉயிரைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications