நீதியும், நிதியும் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:நீதியை வளர்ப்பதிலே, நாட்டை வளர்ப்பதிலே, வளத்தை சேர்ப்பதிலே நீதியும், நிதியும் சேர வேண்டும், வேறு விவகாரத்தில் சேரக் கூடாது என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 2.3 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய ஐந்து மாடிக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, வழக்கு விசாரணைவிவரங்களைத் தெரிவிக்கும் டிஜிட்டல் தகவல் பலகை மற்றும் சென்னை வக்கீல்கள் சங்கத்தில் கம்ப்யூட்டர் வசதி தொடக்க விழா ஆகியவைநடைபெற்றது.

இதில் டிஜிட்டல் தகவல் பலகை வசதியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஒவ்வொரு நீதிமன்றத்திலும்,அப்போது என்ன வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை இன்னொரு நீதிமன்ற வளாகத்திலே இருந்து கொண்டே அறிய டிஜிட்டல் தகவல்பலகை உதவும்.

இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலே தகவல் தொழில்நுட்பத் துறை எந்த அளவுக்கு விரிவடைந்திருக்கிறது என்பதை நான் சொல்லகதேவையில்லை.

உயர்நீதிமன்ற வளாகத்தில் என்னென்ன பணிகள் இன்னும் நிறைவேற வேண்டும் என்பதை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா எடுத்துச் சொன்னார்.பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரினார்.

கடந்த காலத்திலே நடந்தவற்றையெல்லாம் மறந்து விட வேண்டும். வருகிற பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்களோ, முழுமையாகஇல்லாவிட்டாலும் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமாக நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு நிச்சயம், குறைந்தது ரூ. 50 கோடி அளவுக்கு நிதிஒதுக்கப்படும்.

ரூ. 2 கோடி செலவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நாட்டியுள்ளார். அவருடையதிறன், அவருடைய அறிவாற்றல், அவருடைய நம்பிக்கை இவற்றின் அடிப்படையிலே இந்த அடிக்கல் நாட்டு விழா-பல இடங்களிலே வேறுபலரால், அடிக்கல் நாட்டப்பட்டவை, அடிக்கல்லாகவே இருப்பதைப் போல இல்லாமல், இங்கே விரைவில் கட்டடம் எழும்ப என்னாலானஉதவிகளை, என்னாலான உதவிகளையென்றால் தமிழக அரசின் சார்பான உதவிகளை நிச்சயமாக வழங்குவேன் என்ற உறுதியை நான் இங்கேதெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிக்கும், நிதிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. எனவே நிதி, நீதியைக் காப்பாற்றும் நீதி, நிதியின் பக்கம் இருக்கும் நீதியும், நிதியும் சேர வேண்டும்.வேறு விவகாரத்திலே சேரக் கூடாது. நீதியை, வளர்ப்பதிலே, நாட்டை வளர்ப்பதிலே, வளத்தை சேர்ப்பதிலே நீதியும், நிதியும் ஒன்று சேரும் என்றநம்பிக்கையை நான் உங்களுக்கு வழங்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழக மக்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களைத் தெ>வித்துக்கொள்கிறேன்.

அதேபோல சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எனது வாழ்த்துக்களையும், என்னுடை உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்கருணாநிதி.

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, ஏ.ஆர்.லட்சுமணன்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஊனமுற்றோருக்கு உதவ வேண்டும்:

இதற்கிடையில் உடலில் ஊனமுற்றவர்கள், பார்வையில் ஊனமுற்றவர்கள், வாழ வழி செய்யாத, உதவாதவர்களே உண்மையான ஊனமுற்றவர்கள்.ஊனமுற்றவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என சென்னையில் கெவின் கேர் நிறுவனத்தின் சார்பில் உடல் ஊனமுற்றவர்களில்திறமை வாய்ந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கருணாநிதி கூறினார்.இதுகுறித்த அவர் பேசியதாவது,

போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மோட்டார் பொருத்திய பலவிதமான வாகனங்களை தயாரித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காலிவினோத் திவாரி, கண் பார்வையற்ற நிலையிலும் சட்டப்படிப்பு முடித்து, உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றும் டில்லியைச் சேர்ந்த அஞ்சலிஅரோரா, முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டும் சி.ஏ படித்து ஆடிட்டராக பணிபுரியும் டெல்லியைச் சேர்ந்த நேகா பன்சால் ஆகியோருக்கு விருதுவழங்கப்பட்டது.முதல்வர் கருணாநிதி இவர்களுக்கு விருது வழங்கி பேசினார். கருணாநிதி பேசுகையில், இங்கே விருது பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ளஉறுப்பு சிதைவால் ஊனமடைந்தார்களே தவிர, ஊக்கத்தை இழந்து விடவில்லை.

உறுப்புகளில், உடலில் ஊனம் பெற்றவர்களை அரவணைத்து, அன்பு காட்டி, அவர்கள் வாழ வழி காண்பவர்கள் தான் ஊனமில்லாதவர்கள்.அதற்கு வழி செய்ய எண்ணாதவர்கள் தான் உண்மையான ஊனமுற்றோர்.

விருது பெற்ற மூவரும் ஊனத்தை பொருட்படுத்தாமல், தங்களது ஊக்கத்தை இழக்காமல் சாதனை படைத்துள்ளனர். நமது கண்ணுக்குத் தெரிந்துஇவர்களை அழைத்து வந்துள்ளோம். ஆனால் நமது கண்களுக்குத் தெரியாமல் இவர்களைப் போல லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து கொண்டுஇருக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடித்து உதவ வேண்டும்.

வியாபாரியாக, பணக்காரனாக இருப்பதை விட, முதலில் மனிதனாக இருக்க வேண்டும். இந்த விழா மூலம் அந்தப் பண்பு கெவின் கேர் நிறுவனர்ரங்கநாதனிடம் இருப்பதை அறிந்து கொண்டேன்.

கண்ணொளித் திட்டம், பிச்சைக் காரர்களுக்கு உணவு, உறைவிடம் தரும் திட்டம் போன்ற திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். அரசுதன்னால் முடிந்தவரை உதவி வருகிறது என்றாலும், ரங்கநாதன் போன்றவர்களும் , தனியார் அமைப்புகளும் தங்களால் முடிந்தவரை உதவவேண்டும்.

வாழ வழியில்லாமல் கேள்விக்குறியாய் நிற்பவர்கள் நிமிர்ந்து நிற்க, ஒரு ரங்கநாதன் போதாது, இவரைப் போல ஓராயிரம் பேர் உதவ வேண்டும்என்றார் கருணாநிதி.

விழா நிகழ்ச்சிகளை நடிகை ரேவதி தொகுத்து வழங்கினார். முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் பாடல்களைப் பாட, அதற்கு ரஹ்மான் இசையமைத்து பாடிய இசைநிகழ்ச்சியும் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+