கப்பலில் மியான்மர் பொறியாளர் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்தோனேசிய கப்பலில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஊழியர் மர்மமான முறையில்பிணமாகக் கிடந்தார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்பிரிங் குளோரி என்ற கப்பல் சென்னைக்கு வந்திருந்தது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்தமியான்மர் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஹார்வின் மயின்ட் (37) என்பவர்மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மின்சார பொறியாளராக பணியாற்றி வந்த ஹார்வின் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் பாமாயில் எண்ணையைஏற்றிக் கொண்டு இந்தக் கப்பல் சென்னைக்கு வந்திருந்தது.
ஹார்வின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications