பிளம்பர் கட்டி வைத்து எரித்துக் கொலை
சென்னை:சென்னை அம்பத்தூர் அருகே கணவனைக் கட்டி வைத்து எரித்துக் கொலை செய்த மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் சண்முகாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 40). பெரம்பூரைச் சேர்ந்த சிவக்குமார், கடந்த 7 மாதங்களுக்கு முன்புசெல்வி (45) என்பவருடன் சண்முகாபுரம் பகுதியில் குடியேறினார். செல்வியை தனது மனைவி என்று கூறிக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சிவக்குமாரும், செல்வியும்தங்கியிருந்த குடிசையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டு பற்றி எரிந்தது.
வீட்டுக்குள்ளிருந்து செல்வி வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கமுயன்றனர். சிவக்குமார் உள்ளே சிக்கிக் கொண்டதாக செல்வி தெரிவிக்கவே, சிலர் உள்ளே புகுந்து சிவக்குமாரை மீட்க முயன்றனர்.
சிவக்குமாரை நெருப்பிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர முயன்றபோது அவரது கால்கள் வயரினால் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.குழப்பமடைந்த பொதுமக்கள் வயரை அறுத்து சிவக்குமாரை வெளியே கொண்டு வந்தனர். அதற்குள் அவர் பாதி எரிந்திருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் மருத்துவமனையில் சிவக்குமார் சேர்க்கப்பட்டபோதுசெல்வி அங்கு காணவில்லை, தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வியே சிவக்குமாரை கட்டி வைத்து விட்டு தீ வைத்திருக்கலாம் என சந்தேகம்எழுந்துள்ளது. செல்வி உண்மையிலேயே மனைவிதானா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications