திருச்சியில் புலி ஆதரவு ஈழத் தமிழர் கைது; பெரம்பலூரில் 4 டன் இரும்புக் குண்டு சிக்கியது
திருச்சி:திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பெருமளவிலான பணத்தைப்பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் ஒருவரைக்கைது செய்து, 4 டன் இரும்புக் குண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, தீரன் நகர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் குறித்து போலீஸாருக்குத்தகவல்கள் சென்றன. அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஒரு நபர் அவரிடம்வந்து பெரிய சூட்கேஸைக் கொடுத்துச் சென்றதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரது வீட்டை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு 10 மணிக்குபோலீஸ் படை அந்த இலங்கைத் தமிழரின் வீட்டுக்குச் சென்றது. வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அங்கிருந்த அருள்நாதன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அருள்நாதன், தான், தனது மனைவிஜெயந்தி தேவி, ஒருமகள் ஆகியோர் மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஜெயந்தி தேவியின் தந்தை லண்டனில்இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அருள்நாதனின் வீட்டில் விடிய விடிய நடந்த சோதனையில் பல லட்சம் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்தப் பணம்எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்களை அருள்நாதன்போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் சோப்பு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ரமேஷ் என்பரதுதொழிற்சாலையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 டன் இரும்புக் குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
கண்ணி வெடி உள்ளிட்டவற்றைத் தயாரிக்க இந்த இரும்பு குண்டுகள் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸார்வருவதை அறிந்த ரமேஷ் தலைமறைவாகி விட்டார். தொழிற்சாலையில் இருந்த மணிகண்டன் என்பவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications