காதை திருகி..-ஆசிரியை மீது போலீஸில் புகார்
சென்னை:மாணவனின் காதைத் திருகி, கன்னத்தில் பளார் என அடித்ததாக ஆசிரியை மீது போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில் வசித்து வருபவர் ஆசாத் அலி. போஸ்ட்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தார்.
அதில், எனது மகன் ஆரிக் இக்பால், மயிலாப்பூர் கேசரி மேல்நிலைப் பள்ளியில் 7வது படித்து வருகிறான். வீட்டுப் பாடத்தை சரியாக செய்யாமல்பள்ளிக்குச் சென்றுள்ளான்.
இதையடுத்து இந்தி ஆசிரியை ரமா கெளரி என்பவர் எனது மகனின் காதை பலமாகத் திருகி, கன்னத்தில் பளார், பளார் என அடித்துள்ளார். அதில்அவனது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காதிலும் ரத்தம் ஒழுகி துடித்துள்ளான்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாச ராவ், ஆசிரியை ரமா கெளரியை அணுகி கேட்டபோது என்னத்ை திட்டி வெளியேற்றிவிட்டார்கள்.
எனது மகனை அடித்த ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார் ஆசாத் அலி. இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்குமாறு ராயப்பேட்டை உதவி ஆணையருக்கு லத்திகா சரண் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சீனிவாச ராவிடம் கேட்டபோது, இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதுகுறித்து எனக்குத் தெரிய வந்தவுடன்,சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டுப் பெற்றோம்.
அந்த ஆசிரியைக்கு மெமோவும் அனுப்பப்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்கு பெற்றோர்கள்உரிய அவகாசம் கொடுத்து விட்டு அதன் பின்னர் காவல்துறையை நாட வேண்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications