முதிய தம்பதியின் உயிர் குடித்த கொசுவர்த்தி சுருள்
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொசு வர்த்திச் சுருளிலிருந்து கிளம்பிய தீப்பொறி, 125 ஆண்டு கால பழமை வாய்ந்த வீட்டை தீயில்கருக்கி, அந்த வீட்டில் இருந்த முதிய தம்பதியையும் உயிரோடு கொளுத்தி விட்டது.
காரைக்குடி அருகே உள்ள செல்லப்பச் செட்டியார் ஊரணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திண்ணப்ப செட்டியார் (87). இவரது மனைவி முத்தாள்ஆச்சி (80). இருவரும் தனித்து வசித்து வந்தனர்.
இவர்கள் இருந்த வீடு முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் இழைத்து இழைத்து கட்டப்பட்ட பெரிய மாளிகையாகும். இந்த வீடு கட்டி 125 ஆண்டுகள்ஆகிறதாம்.
தின்னப்பச் செட்டியாரின் மகன் மெய்யப்பன் தனது குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறார். மகள் அழகம்மை தேவகோட்டையில் குடும்பத்துடன்வசிக்கிறார்.
முதிய தம்பதிகளுக்கு உதவி செய்வதற்காக பகலில் வேலைக்காரர்கள் வந்து செல்வார்கள், இரவு சென்று விடுவார்கள். சமீப காலமாக முத்தாள் ஆச்சிஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல திண்ணப்பச் செட்டியார் கதவுகளை மூடி விட்டுத் தூங்கச் சென்றார். தூங்குவதற்கு முன்பு கொசுவர்த்திச்சுருளை பொருத்தி வைத்துள்ளார்.
இரவில் திடீரென தீவாசம் வருவதை உணர்ந்து எழுந்து பார்த்துள்ளார் திண்ணப்பச் செட்டியார். அப்போது கொசுவர்த்திச் சுருளிலிருந்து கிளம்பியதீப்பொறியால் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது தெரிய வந்து அதிர்ந்தார்.
வீட்டை விட்டு வெளியேறி உதவிக்குக் குரல் கொடுத்துப் பார்த்தார். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் செட்டியார் கொடுத்த குரல்கேட்கவில்லை.
இதையடுத்து பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் நுழைந்து தனது மனைவியை அப்படியேத் தூக்கிக் கொண்டு வெளியே வர முயன்றார்.அவரது வயது காரணமாக வேகமாக வர முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் உத்தரம் அப்படியே தீயுடன் கீழே விழுந்து செட்டியாரையும்,அவரது மனைவியையும் அமுக்கி விட்டது.
தீயில் கருகி இருவரும் பரிதாபமாக இறந்து போயினர். அதிகாலை அந்தப் பகுதிக்கு வந்த பால்காரர் செட்டியாரின் வீடு எரிந்து கொண்டிருப்பதைப்பார்த்து ஊரைக் கூட்டி அனைவரையும் எழுப்பினார். தீயணைப்புப் படைக்கும் தகவல் தரப்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மிகவும் சிரமப்பட்டு தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது செட்டியாரும், அவரது மனைவியும்கரிக் கட்டையாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
செட்டியார் நினைத்திருந்தால் அவர் மட்டும் தப்பியிருக்கலாம். ஆனால் மனைவியை விட்டுச் செல்ல அவருக்கு மனம் இல்லை. அதனால்தான்உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் சென்று மனைவியை தூக்கிக் கொண்டு வர முயன்று, மனைவியோடு பரிதாபமாக இறந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications