புலிகளுக்கு உதவினால் கடும் நடவடிக்கை-டிஜிபிஆயுதக் கடத்தல்: இதுவரை 41 பேர் கைது
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபிமுகர்ஜி எச்சரித்துள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பாக இதுவரை 16 இலங்கைத் தமிழர்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக டிஜிபி முகர்ஜி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் முகர்ஜி கூறியிருந்ததாவது:
திருச்சியில் 6.3.2007 அன்று அருள் சீலன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,ராகுலன், பிரதீபன், பகீரதன் ஆகிய இலங்கைத் தமிழர்களும், ஹவாலா முறையில் ரூ. 17 லட்சம் பணம் கொடுத்த சென்னையைச் சேர்ந்த பரக்கத்ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ராகுலன் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் 4,500 கிலோ எடை கொண்ட 150 மூடை இரும்புக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தி கள்ளக் கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16 இலங்கைத் தமிழர்கள்உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்முகர்ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications