மீனவர்கள் இலங்கையில் மீன் பிடிக்க லைசன்ஸ்?
சென்னை:இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்க இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி விட்டது. பல காலமாக நடந்து வரும் இந்தத்தாக்குதலுக்கு இதுவரை ஒரு முடிவும் எட்டப்படவில்லை. சமீபத்தில் கூட கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக சமீபத்தில் அறிக்கை விட்ட முதல்வர் கருணாநிதி, இனியும் தாக்குதல் தொடர்ந்தால் மீனவர்களின் கைகள் சும்மா இருக்காது எனகாட்டமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தீர்வைக் கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, இலங்கை கடல்பகுதியை ஒட்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களுக்கு லைசன்ஸ் வழங்க அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் வரக் கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து இந்த லைசன்ஸ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசுடன் இதுகுறித்து ஆலோசித்த பின்னர் லைசன்ஸ் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications