எனக்கு தைரியம் ஏறிப் போச்சு: விஜயகாந்த்
வேலூர்:எனக்கு தைரியம் ஏறிப் போய் விட்டது. அதை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வேலூரில் தேமுதிக மகளிர் மாநாடு நேற்று கோலாகலமாக நடந்தது. வேலூரே குலுங்கிப் போகும் அளவுக்கு தேமுதிக தொண்டர்களும், மகளிர்அணியினரும் மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
கோட்டை மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். மனைவி பிரேமலதா தலைமை தாங்கினார்.
விஜயகாந்த் பேசுகையில், பெண்களின் நிலை இன்று நன்றாக இல்லை, அவர்கள் செளகரியமாக இல்லை. பெண்களை படிக்க வைக்க வேண்டும்.ஆனால் இன்று 10ம் வகுப்பு மேல் படிக்க வைப்பதில்லை.
எங்களது கட்சியின் சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலனுக்காக பல திட்டங்களைக் கூறியிருந்தோம். பிறக்கும் பெண் குழந்தைகளுக்குஅவர்கள் பெயரில் அரசே ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யும் என்பது அதில் ஒன்று.
ஆனால் இந்தத் திட்டத்தை, மக்களுக்குத் தேவையான இத்திட்டத்தை தற்போதைய தமிழக அரசு அமல்படுத்த முயற்சிக்கவில்லை.
அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டுகள் படு மோசமாக உள்ளன. பல குழந்தைகள் பிரசவத்திற்குப் பின்னர் இறந்து விடுகின்றன. சுகாதாரம்அந்த அளவு மோசமாக உள்ளது. கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கு அரசு சார்பில் நல்ல உணவு தர வேண்டும். அதுவும் வழங்கப்படுவதில்லை.
காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாற்றுப் பிரச்சினை என எதிலுமே அரசு அதிக அக்கறையுடன் செயல்படவில்லை.பாலாற்று மணல் விவகாரத்தில் ஆளுங் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அமைச்சர் அம்பரீஷ் பதவி விலகினார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் கூட சத்தம்காட்டாமல் உள்ளனர். அது ஏன்?
எனக்கு தைரியம் அதிகமாகி விட்ட, ஏறிப் போய விட்டது. அதை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. விஜயகாந்த் அசைய மாட்டான்.
ஏறி வரும் விலைவாசியைக் கண்டித்து தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும். எப்போது என்று சென்னையில் வெள்ளிக்கிழமை கூடிமுடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications