மகளிர் ஸ்பெஷல்: பெண்களே ஓட்டிய விமானம்
சென்னை:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை, மும்பை இடையிலான விமானத்தை முழுக்க முழுக்க பெண் விமானிகளே இயக்கினர்.
உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் நேற்று இந்த தினத்தை பெண்கள் படு உற்சாகமாககொண்டாடினர்.
இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் ஒரு வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது,இந்தியன் நிறுவனம் சார்பில் (முன்னாள் இந்தியன் ஏர்லைன்ஸ்) சென்னை, மும்பை இடையே முற்றிலும் பெண்களே இயக்கும் சிறப்பு விமானம்இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஏ-320 ரக பயணிகள் விமானத்தை 7 பேர் கொண்ட பெண் விமானிகள் நேற்று இயக்கி அசத்தினர். கேப்டன் தீபா தலைமையிலான இந்தபெண் விமானிகள் குழு சென்னையிலிருந்து மும்பைக்கு பயணிகளை விமானத்தில் ஏற்றிச் சென்றனர். மீண்டும் அங்கிருந்து சென்னை வந்துசேர்ந்தனர்.
இந்த விமானத்தில் கோ பைலட்டாக தாயல் என்பவர் பணியாற்றினார். ஹேமா, உஷா, ரேச்சல், குரூஸ், மானு ஆகியோர் மற்ற விமானிகள் ஆவர்.
சென்னையிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் 135 பயணிகளும், மும்பையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 129 பேரும் பயணம் செய்தனர்.இவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
பெண் விமானிகளுக்க பயணிகள் இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நாங்களே விமானத்தை ஓட்டியதில் எந்த வித்தியாசமும்தெரியவில்லை. எங்களாலும் இதுபோன்ற விமானத்தை செலுத்த முடியும் என்பதில் பெருமைப்படுகிறோம் என்றார் கேப்டன் தீபா.
சென்னை விமான பயிற்சி நிறுவனத்தில் தீபா பைலட்டாக பயிற்சி எடுத்துள்ளார். இந்தியன் நிறுவனத்தில் 70 பெண் விமானிகள் உள்ளனராம்.இவர்களில் 15 பெண்கள் கேப்டன்களாக உள்ளனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து பாங்காக் சென்ற விமானத்தை பெண் விமானிகளே செலுத்தியது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications