பெண்ணை செல்போனில் படம் பிடித்தவர் கைது
சென்னை: ரயிலில் எதிர் இருக்கையில் பயணித்த பெண் என்ஜீனியர், குனிந்து நிமிர்ந்தபோது அதை செல்போன் கேமராவில் படம் எடுத்த கேரள வாலிபரைபோலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியில் வசித்து வருபவர் அனந்தராமன். இவரது மனைவி செளந்தர்யா. கம்ப்யூட்டர் என்ஜீனியரானஇவருக்கு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கான இன்டர்வியூ நடந்தது.
இதற்காக தனியாக பெங்களூர் சென்ற செளந்தர்யா இன்டர்வியூவை முடித்து விட்டு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்குத் திரும்பினார்.
அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிர் இருக்கையில் கேரளாவைச் சேர்ந்த பிங்கோ என்ற வாலிபர் அமர்ந்திருந்தார். கையில்காமரா செல்போன் வைத்திருந்த அவர், செளந்தர்யா, திரும்பும்போதும், குனியும்போதும், நிமிரும்போதும் அவற்றை கேமரா போனில் படம்பிடித்துள்ளார்.
இதைப் பார்த்து விட்ட செளந்தர்யா, பிங்கோவைத் திட்டியுள்ளார். ஆனால் அந்த வக்கிரப்புத்திக்காரரோ அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போதுஅந்தப் பெட்டி வழியாக ரோந்து போலீஸார் வந்தனர். அவர்களிடம் செளந்தர்யா, பிங்கோவின் அநாகரீகச் செயல் குறித்து புகார் தெரிவித்தார்.
இதையடுத்து பிங்கோவிடமிருந்த செல்போனை வாங்கிப் போலீஸார் பரிசோதித்தனர். அதில் செளந்தர்யாவின் ஆபாச கோலப் படங்கள் இருந்தன.அதுதவிர வேறு சில பெண்களின் ஆபாசப் படங்களும் அதில் இருந்தன.
இதையடுத்து பிங்கோவைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தில் கேமரா செல்போன் மூலம், பெண்களின் பின்புறம், மார்பு, சேலை விலகியது, வயிறு என பல பகுதிகளை மறைந்திருந்தபடி எடுத்துஇன்டர்நெட்டில் ஒரு கும்பல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிங்கோ பிடிபட்டுள்ளதால், அவருக்கும் இந்த இன்டர்நெட் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications