இனி ஜனவரி, பிப்வரியில் மட்டுமே ஜல்லிக்கட்டு
மதுரை:ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம். எனவே அதை முழுமையாக தடை செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றைஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரோஸ்ஆகியவற்றுக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி பானுமதி, இரண்டுக்கும் தடைவிதித்து தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு தரப்பினரும் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த ஜனவரிமாதம் விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி அலங்காநல்லூர்,அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட கிராமங்களில் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, தர்மா ராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இறுதிவிசாரணைக்கு வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகளின் தீர்ப்பு விவரம்:
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை தடை செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால்ஜல்லிக்கட்டின் போது மிருகங்கள் துன்புறுத்தப்படுவதாக கருத முடியாது.
மாடுகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையிலான ஒரு போட்டிதான் ஜல்லிக்கட்டு. இது விளையாட்டுப் போட்டிதான். இருப்பினும் இந்தப்போட்டியால் மாடுகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தப்பட வேண்டும். இதற்காக அரசு கட்டுப்பாடுகளையும்,விதிமுறைகளையும் வகுக்கலாம்.
பயிற்சி பெற்ற வீரர்களை அனுமதிப்பது, போட்டி நடக்கும் இடத்தில் கால்நடை டாக்டர்கள், பொது மருத்துவர்கள் அதிகம் பேரை நியமிப்பது,மாடுகளுக்குப் ப>சோதனை, போதைப் பொருட்கள் கொடுக்கப்படுவதைத் தடுப்பது, மாடுகள் மீது வண்ணப் பொடிகளை வீசுவது போன்றவைதொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
போட்டி நடக்கும் இடத்திலிருந்து நல்ல தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் தனியாக பிரிக்கப்பட வேண்டும்.காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவ வசதி செய்யப்பட வேண்டும்.
ஜல்லிக் கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றை பொங்கல் பண்டிகை போட்டிகள் நடைபெறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும்நடத்தலாம். மற்ற மாதங்களில் நடத்த அனுமதி கிடையாது. இதை காவல்துறை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்ப>ய கலாச்சாரத்தில் ஒன்று. எனவே அதை முழமையாக தடை செய்ய முடியாது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்த வாலிபர் மாரிமுத்துவின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு தனி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை. எனவே அத்தொகையை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றுநீதிபதிகளின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications