தொடங்கியது கிரிக்கெட் திருவிழா!
மாண்டிகோ பே (ஜமைக்கா):காலிப்சோ கீதங்கள், சிம்பொனி ரெகே, விண்ணை மிளிர வைக்கும் வாணவேடிக்கை என கண் கவர் நிகழ்ச்சிகளின் பின்னணியில், 9 வது ஐசிசிஉலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள மாண்டிகோ நகரில் உள்ள டிரவ்லானி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கிவைக்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட வீரர்கள், 16 நாட்டு அணிகள், கோடானு கோடி ரசிகர்களின் உற்சாக எதிர்பார்ப்பான 9வது உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜமைக்காவில்உள்ள கண்கவர் டிரவ்லானி ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்ததது.மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் இமயங்களில் ஒருவருமான சர் கர்பீல்டு சோபர்ஸ் போட்டியை முறைப்படிதொடங்கி வைத்தார்.
சோபர்ஸ் பேசுகையில், மேற்கு இந்தியத் தீவுகள் சார்பில் 9வது ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியை பெருமையுடனும், நெகிழ்ச்சியுடனும்தொடங்கி வைக்கிறேன் என்றார்.
அதன் பின்னர் ஒவ்வொரு அணியின் வீரர்களும் அணிவகுத்து வந்தனர். இந்திய அணி வீரர்கள் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையிலும்,போட்டியை நடத்தும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் கேப்டன் பிரையன் லாரா தலைமையிலும் அணிவகுத்து வந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகளின் பெருமையை, கலாச்சாரத்தை, கலையை வெளிப்படுத்தும் வகையிலான கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா களைகட்டியது.
வெஸ்ட் இண்டியன் எனர்ஜி என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. கரீபிய தீவுகளின்கலாச்சாரப் பின்னணியில் விரிந்து பரந்த நடன, இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைத்தன.
ரெகே, டான்ஸ் ஹால், காலிப்சோ மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளின் பிரபலமான இசை வடிவங்களும், நடனங்களும் உற்சாகம் பொங்க நடத்திக்காட்டப்பட்டன.
2500 கலைஞர்கள் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேற்கு இந்தியக் கலைஞர்கள் தவிர அயர்லாந்து கலைஞர்களின் நிகழ்ச்சிகளும்நடந்தன. இதில் இந்திப் பாடல் ஒன்றும் பாடப்பட்டு, அதற்கு மேற்கு இந்தியத் தீவுக் கலைஞர்கள் அட்டகாசமான ஆட்டத்தையும் போட்டனர்.ரங்கீலா படத்தில் வரும் ரங்கீலா என்ற பாட்டுக்கு மேற்கு இந்தியத் தீவுகளின் கலைஞர்கள்ஆடியபோது உற்சாகம் களை கட்டியது.
கலை நிகழ்ச்சியின்போது சுமார் அரை மணி நேரத்துக்கு நடந்த வான வேடிக்கை அனைவரையும் கவர்ந்தது. வானிலிருந்துநட்சத்திரங்கள் உதிர்ந்து உச்சந்தலையில் விழுவதைப் போன்ற ஒரு பிரமையை அது ஏற்படுத்தியது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை ரூபி, ஷாக்கி, பயான் லியான்ஸ் ஆகியோர் இணைந்து பாடி கிரிக்கெட்உணர்வுக்கு உயிரூட்டினர்.
3 மணி நேரம் நடந்த இந்த தொடக்க விழாவை 10 ஆயிரம் பேர் நேரில் பார்வையிட்டனர். 150 கோடிக்கும் மேற்பட்டோர் தொலைக்காட்சிகள்மூலம் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
அனைத்து அணிகளின் சார்பிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் லாரா வீரர்களுக்கான உறுதிமொழியை வாசிக்கஅனைத்து அணி வீரர்களும் அதைத் திருப்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா தனதுவேட்டையை 17ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications