ஷேவாக்குக்கு எதிராக பாக். சதி: சு.சுவாமி
டெல்லி:இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல்செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகூறியுள்ளார்.
அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்தவிமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி.
டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும்அவமானப்படுத்தும் செயலில் தேச விரோத சக்திகள் சில மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த தேச விரோத சக்திகளின் வலையில் மீடியா சிக்கியுள்ளது. எனவே அவர்கள் உடனடியாக ஷேவாக் குறித்து தவறாக எழுதுவதை நிறுத்தவேண்டும்.
எனக்குத் தெரிந்த வரை, பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சில சூதாட்ட புரோக்கர்கள்தான் இதன் பின்னணியில் உள்ளனர்.இதுதொடர்பாக எனக்கு உறுதியான சில தகவல்கள் கிடைத்துள்ளன.
போட்டியின் போக்கை மாற்றக் கூடிய திறமை படைத்தவர் ஷேவாக். அவரது சுய நம்பிக்கையைத் தகர்த்து, மன உளைச்சலை அதிகப்படுத்தினால்அவரது ஆட்டத்தை சிதறடித்து விடலாம் என்ற நோக்கில், அந்த சூதாட்ட புரோக்கர்கள், ஷேவாக்குக்கு எதிராக சதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அணியில் ஷேவாக் இருந்தால் அது தங்களது அணிகளுக்கு ஆபத்து என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான் ஷேவாக்கை விரட்டியடிக்கஅவர்கள் இப்படி சதி செய்து வருகிறார்கள்.
பாகிஸ்தானில் போய் முச்சதம் அடித்தவர் ஷேவாக். அதைப் பாராட்டும் வகையில், அடுத்த 20 இன்னிங்ஸ்களில் ஒரு ரன் கூட எடுக்காவிட்டாலும்கூட அவருக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் சுவாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications