கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செல்லாது
சென்னை:தமிழக அரசின் மேல் நிலைப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அரசுபிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 1,200 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவில் 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பகுதி நேர ஊழியர்களாகபணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1999-2000 ஆண்டில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஆட்சியில்பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த ஆசிரியர்களின் பணியை நிரந்தரமாக்க சிறப்புத் தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு பி.எட்கல்வித் தகுதி இல்லாவிட்டாலும், பி.எஸ்.சி பட்டப் படிப்பு அல்லது எம்.எஸ்.சி பட்டமேற்படிப்பு இருந்தால் போதும் என்றும் கடந்த அக்டோபர்4ம்தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பி.எட் கம்ப்யூட்டர் பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எங்களை போன்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்கவேண்டும்.
பி.எட் கல்வித் தகுதியில்லாத, ஏற்கனவே பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது. அரசின் இந்த உத்தரவைரத்து செய்யவேண்டும் என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்து இன்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6ஆண்டுகளாக பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு பிறப்பித்த உத்தரவுசெல்லாது, எனவே அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
கம்ப்யூட்டர் பட்டமேற்படிப்பு மற்றும் பி.எட் கல்வித் தகுதி உடையவர்கள்தான் இந்த நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புஅலுவலகம் மூலமாகவும், மற்ற விதிமுறைகளை பின்பற்றியும்தான் இந்த 1880 பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications