திருச்சி: தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!!
திருச்சி:திருச்சியில், தாயுடன் தினசரி சண்டை போட்டு வந்த தந்தையை 30க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றான் மகன்.தடுக்க முயன்ற தாய்க்கும் காயம் ஏற்பட்டது.
திருச்சியில் உள்ள பி.எச்.இ.எல். நிறுவனத்தில் முதுநிலை சிவில் மேலாளராக பணியாற்றி வந்தவர் நந்தகோபால் (48). திருச்சி எழில் நகரில்குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தினசரி தனது மனைவியுடன் சண்டை போடுவாராம் நந்தகோபால். அத்தோடு அடிக்கவும் செய்வாராம். இவர்களது சண்டையால் மகன்ராம்கார்த்திக் (19) பார்த்து வெறுத்துப் போயிருந்தான்.
![]() |
இந்த நிலையில் நேற்று இரவும் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் நந்தகோபால். சண்டையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ராம்கார்த்திக், ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்தான்.
வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்த அவன் தனது தந்தையை சரமாரியாக வெட்டித் தள்ளினான். இதில் நந்தகோபாலின் உடலில் 30க்கும்மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் விழுந்த நந்தகோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கணவரை மகன் வெட்டுவதைப் பார்த்துப் பதறியநந்தகோபாலின் மனைவி மகனைத் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
ஆத்திரம் தீர தந்தையை வெட்டித் தள்ளிய பின்னர் நேராக கத்தியுடன் காவல் நிலையம் சென்ற ராம் கார்த்திக் போலீஸா>டம் சரணடைந்தான்.போலீஸார் விரைந்து வந்து நந்தகோபாலின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தாயுடன் சண்டை போட்ட தந்தையை வெறித்தனமாக மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications