நேபாள மன்னரை விரட்டிய போஸ்ட்மேன்
காத்மாண்டு:நேபாள நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களில் இடம்பெற்றிருந்த மன்னரின் படம்அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதில் தபால்காரர் படம் இடம்பெற்றுள்ளது.
நேபாள நாட்டில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு, பல கட்சி கூட்டணி ஆட்சி வந்துள்ளது. பிரதமராக கிரிஜா பிரசாத்கொய்ராலா உள்ளார்.
மன்னரின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது. நாட்டின் சாதாரண பிரஜையைப் போலவே இப்போது அவரும் கருதப்படுகிறார். இந்தநிலையில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் இருந்த மன்னரின் உருவப்படத்தைஅகற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன்படி தற்போது நேபாள் தேசிய வங்கி புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை வெளியிட்டுள்ளது. அதில் மன்னரின் உருவத்திற்குப்பதில் தபால்காரர் ஒருவரின் படம் இடம் பெற்றுள்ளது.
தபால்களை ஏந்தியபடி உள்ள தபால்காரரின் உருவம் நாணயங்களில் இடம் பெற்றுள்ளது. நேபாளத்தில் தபால்தலைகள் அமலுக்கு வந்து 135ஆண்டுகள் ஆவதையொட்டி அதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த தபால்காரர் படம் இடம்பெற்றுள்ளதாக நேபாள் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications