அதிமுக போராட்டம்-ஆதரவு கோரும் வைகோ
சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடக்கோரி அதிமுக சார்பில் நடைபெறுவுள்ள போராட்டத்திற்கு தமிழகமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நதிநீர் உரிமையை தமிழகம் பெறுவதற்காக கடந்த 16 ஆண்டுகாளாக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தான் முதல்வராக இருந்த போது தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதற்காக சென்னையில் நான்கு நாட்கள் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினார்.
தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனையில், தமிழகத்தின் உரிமைகளை, காவரிப் படுகை விவசாயிகளின்உரிமைகளை பாதுகாப்பதற்காக, நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில் உடனே வெளியிட வேண்டும் என்றுவற்புறுத்தியும், எதிர்காலத்தில் காவிரி நதிநீர் உரிமையை தமிழகம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்ககக் கோரிவற்புறுத்தியும், ஜெயலலிதா வரும் 18ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்.
வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக காவிரி நதிநீர் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது. இந்த போராட்டம்வெற்றி பெற மதிமுக வாழ்த்துவதோடு, தமிழக மக்களும், விவசாயிகளும் இந்த அறப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications