உகாதி: கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை:தெலுங்குப் புத்தாண்டையொட்டி முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகாகவி பாரதியார், சுந்தரத் தெலுங்கு என தெலுங்கு மொழியைப்புகழ்ந்து பாடியுள்ளார்.
தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு தொழில்கள் புரிந்து அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்துவருகின்றனர்.
கடந்த கால ஆட்சியில் தெலுங்குப் புத்தாண்டுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்ததும், அதனை திமுக ஆட்சி மீண்டும் விடுமுறையாகஅறிவித்ததும் தெலுங்கு மக்கள் அறியாத செய்தி அல்ல.
பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்ச் சமுதாய மக்களுடன் கூடிக் கலந்து இன்புற்றும் இணக்கமுடனும், வாழ்ந்து வரும் தெலுங்கு மக்கள் அனைவருக்கும்என் உளம் கனிந்த உகாதி திருநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இதேபோல ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், உகாதித் திருநாளில், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்துமக்களுக்கும் எனது இனிய உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்.
பன்மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என்றுசொன்னால் அது மிகையாகாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்தமிழ் மக்களோடு இணைந்து பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய ஒற்றுமை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துபுத்தாண்டுத் திருநாளாம் இந்த உகாதித் திருநாள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், நலத்தையும், வெற்றிகளையும் வழங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications