தமிழக சட்டசபை நாளை கூடுகிறது-23ம் தேதி பட்ஜெட்
சென்னை:தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில், சட்டசபை கூடுவதால், விறுவிறுப்பானகூட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை தொடங்குகிறது. முதலில், மறைந்த உறுப்பினர்கள் பழனிவேலன், சுந்தராம்பாள்,மலைக்கண்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
பின்னர் மறைந்த மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும்.பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படும்.
அதன் பின்னர் 23ம் தேதி சபை மீண்டும் கூடும். காலை 9.30 மணிக்கு சபை கூடியதும் நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்யப்படும். இந்தக்கூட்டத் தொடர் ஏப்ரல் இறுதி வரை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.
பரபரப்பான சூழல்:
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் உச்சகட்டத்தில் உள்ளன. குறிப்பாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அதிமுக கொதிப்புடன்உள்ளது. எனவே இந்தப் பிரச்சினையை அதிமுக பெரிதாக எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, பாமகவும் திமுக மீது உரசலுடன் உள்ளது. டாஸ்மாக் விவகாரம், சிறப்பு பொருளாதார மண்டலம், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில்அது அரசுக்கு எதிரான கருத்துடன் உள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத் தொடரில் பாமக எம்.எல்.ஏக்களும் இதுவரை இல்லாத அளவுக்கு பிரச்சினைஎழுப்பக் கூடும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications