நீதிமன்றத்தை அவமதிக்கும் கேரளா: கருணாநிதி
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கேரள அரசு நியமித்த நிபுணர் குழு ஆய்வு நடத்தியிருப்பதுஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநி வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் நிலைமை குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அதன் அடிப்படையில்தான், அணையின் உயரத்தை அதிகரிப்பதால் அணைப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனஉச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு தன்னிச்சையாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழு அணைப் பகுதியில் ஆய்வும் நடத்தியுள்ளது. இந்தக்குழுவின் தலைவர், அணையின் உயரத்தை அதிகரித்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும்செயலாகும்.
மத்திய அரசுடனும் கலந்து ஆலோசிக்காமல், உச்சநீதிமன்றத்தையும் கேட்காமல், சம்பந்தப்பட்ட தமிழக அரசுடனும் கலந்து பேசாமல்,தன்னிச்சையாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் இந்த முயற்சிஉண்மையாக இருக்குமானால், தமிழகமும் இந்த நாட்டின் ஒரு பகுதி என்பதை மனதில் கொண்டு மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications