விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டிய பயணி
கொல்கத்தா:பாங்காக்கிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அதில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டுப்பயணி மிரட்டியதால் விமானம் அவசரம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
பாங்காக்கிலிருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டுப் பயணிஒருவர், குடிபோதையில் சக பயணிகள், விமான ஊழியர்களிடம் வரம்பு மீறி நடக்க ஆரம்பித்தார். ஒரு பயணியையும் அவர் அடித்து விட்டார்.
இதையடுத்து அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த நபர், என்னை ஏதாவது செய்தால்நான் குண்டு வைத்துள்ளேன், விமானத்தைத் தகர்த்து விடுவேன் என்று அந்த நபர் மிரட்டினார்.
இதனால் விமானத்தில் பீதி எழுந்தது. உடனடியாக விமானத்தை அருகில் உள்ள கொல்கத்தா விமான நிலையத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.கொல்கத்தா விமான நிலையத்துக்குத் தகவல் தரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது. அதையடுத்து கமாண்டோ அதிரடிப்படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும்விமானத்திற்குள் ஏறினர். குண்டுவைத்து விடுவதாக மிரட்டிய பயணியிடமும் அவரது உடமைகளிலும் சோதனை போடப்பட்டது.
மேலும் விமானத்தையும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் நிறுத்தி விமானம் முழுவதும் சோதனை போடப்பட்டது. ஆனால் குண்டுஎதுவும் சிக்கவில்லை.
குண்டு வைத்து விடுவேன் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்திய பயணியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications