வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:3 நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த வங்கி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஊதிய உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வங்கி ஊழியர்கள் இந்தியா முழுவதும்28ம் தேதி முதல் 30ம் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்திருந்தனர்.
இதன் காரணமாக 3 நாட்களும், ஏப்ரல் 1, 2 ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதாலும் மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிப் பக்கம் பொதுமக்கள்வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்திய வங்கிகள் சங்கத்துடன் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுக்குறித்துஅகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், 28ம் தேதி முதல் நடந்த இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுகிறோம்.
காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. மற்ற கோரிக்கைகள்பற்றி இந்திய வங்கிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்றார்.
இதுதொடர்பாக ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் குருதாஸ் குப்தா தலைமையில் வங்கி ஊழியர் சங்க ஐக்கிய சம்மேளன பிரதிநிதிகள்மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது வங்கிப்பணிகளுக்கு புதிதாக ஊழியர்களை நியமிக்கப்பதற்கான தடை நீக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில்உறுதியளிக்கப்பட்டது. வங்கிப்பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்த முறையில் விடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications