திமுகவினரின் நூதன லஞ்சம்-விஜயகாந்த் அம்பலம்
சென்னை:தமிழகத்தில் பணமாக லஞ்சம் வாங்குவதற்குப் பதில் பங்குப் பத்திரங்களாக வாங்கிக் குவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், நாட்டில் விலைவாசி உயர்ந்து விட்டதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வர்கருணாநிதியும் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறியுள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கருணாநிதி கூறுகிறார்.
எனவே, விலைவாசி உயர்ந்து மக்கள் அவதிப்படுவதை மத்திய, மாநில அரசுகளே ஒப்புக் கொண்டுள்ளன. விலைவாசி ஏறி விட்டதாக இருஅரசுகளும் கூறியுள்ள போதிலும், அதைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், சுகாதாரம், தண்ணீர் ஆகிய இவைதான் மக்களுக்கு அத்தியாவசியமானது. இவை மக்களுக்குநியாயமாகவும், தாராளமாகவும் கிடைக்க வேண்டும்.
சென்னை நகரில் மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதாவது எம் சர்வீஸ் என்கிறார்கள். அப்படி என்றால் என்ன? "எம் சர்வீஸ்என்றால் மணி சர்வீஸாகும். ஏமாற்றும் சர்வீஸ் இது.
பால் விலையை உயர்த்தி விட்டனர். இதன் மூலம் ஏழை மக்களை அவதிப்பட வைக்கிறார்கள். கேட்டால், அதிமுக ஆட்சியில்தான் பால் விலைஉயர்ந்தது என்கிறார் கருணாநிதி, இல்லை இல்லை கருணாநிதிதான் பால் விலையை உயர்த்தி விட்டார் என்கிறார் ஜெயலலிதா.
இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி அறிக்கை விட்டு மக்களை ஏமாற்று கிறார்கள். விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.தவறினால், என் போராட்டமே வேறு விதமாக இருக்கும்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பதாக கருணாநிதி கூறுகிறார். இந்தப் பொற்கால ஆட்சி மக்களுக்குக் கிடையாது. அவர்களுக்குத்தான் பொற்காலஆட்சி.
லஞ்சம் வாங்குவதில் கூட புதிய முறையை கண்டுபிடித்து கையாளுகிறார்கள். அதாவது பணமாக வாங்கினால்தானே சிக்கல், மக்களுக்குத் தெரிந்துவிடுமே! எனவே பணத்திற்குப் பதில் பங்குகளாக வாங்கிக் குவிக்கிறார்கள்.
காவிரிப் பிரச்சனையில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்தப் பிரச்சனையில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் அம்பரீஷ் தனது பதவியை தூக்கி எறிந்தார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? என்றார் விஜயகாந்த்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications