தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நெல்லையில் அண்ணா பல்கலைக்கழக கிளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:2007-08ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை இன்று காலை 9 மணிக்கு கூடியது. அவை கூடியதும், நிதியமைச்சர் க.அன்பழகன் 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத்தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர சத்துணவுடன் வாரம் 2 முறைக்குப் பதிலாக இனிமேல் 3 முறை முட்டை வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை மேலும் பிரித்து திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு நெல்லை அண்ணா பல்கலைக்கழகம்அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் நிதி வருவாய் ரூ. 44 ஆயிரத்து 532. 28 கோடி ஆகும். செலவீனங்கள் ரூ. 44 ஆயிரத்து 633.66 கோடி. பற்றாக்குறை ரூ. 101.38கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

பத்திரிக்கையாளர் நல நிதியம் அமைப்பு.

48 பழம்பெரும் கோவில்கள் ரூ. 10 கோடியில் புதுப்பிப்பு.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா.

மாமல்லபுரத்தில் சிற்பப் பூங்கா.

முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் ரூ. 50 லட்சத்தில் புதுப்பிப்பு - நூற்றாண்டு விழா தோரண வாயில் - அணையா விளக்கு அமைப்பு.

சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டை.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயர்வு.

எல்லைப் போராட்ட தியாகிகளுக்கான நிதியுதவி ரூ. 4.000 ஆக உயர்வு.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கில, பிறமொழிக் கையேடுகள் அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

இலவச டிவி திட்டத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு.

சென்னையில் நிரந்தர புத்தகப் பூங்கா அமைக்கப்படும்.

விருதுநகரில் புதிய சிறப்பு பொருளாதார மண்டலம்.

துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ. 58.4 கோடி.

அரசு ஊழியர்களின் பொங்கல் முன் பணம் ரூ. 2,000 ஆக உயர்வு.

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதுமில்லை

39 ரயில்வே மேம்பாலங்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு.

ரூ. 350 கோடியில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

வேளச்சேரி-புனித தோமையைர் மலை வரையிலான விரைவு ரயில் திட்டததிற்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு.

தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு.

வரும் கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் மாற்று முறை அறிமுகம்.

அரசுக் கல்லூ>களில் ரூ. 25 கோடியில் புதிய வகுப்பறைகள்.

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம்தொடங்கப்படும்.

திருவாரூர், தர்மபுரியில் தலா ரூ. 100 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ. 1,20கோடி.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 2,286 கோடி ஒதுக்கீடு.

நீதித்துறைக்கு ரூ. 2,70 கோடி

ரூ. 1,25 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

சென்னை நகரில் ரூ. 16 கோடி செலவில் சாலை பாதுகாப்புப் பணிகள்.

மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ரூ. 54 கோடிஇலவச சீருடைத் திட்டத்துக்கு ரூ. 58 கோடி.

பிளஸ் ஒன் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் திட்டத்துக்கு ரூ. 102 கோடி.

இலவச பஸ் பாஸ் திட்டத்துக்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 300 கோடி மானியம்.

பள்ளிப் பேருந்துகளுக்கு காலாண்டு வரி ரூ. 50 ஆக குறைப்பு.

கல்லூரிப் பேருந்துகளுக்கு காலாண்டு வரி ரூ. 100 ஆக குறைப்பு.

உலக வங்கியின் ரூ. 2,547 கோடி நிதியுதவியில் நீர்வள நிலத் திட்டம்.

திட்டக்குடி வெலிங்டன் ஏரி ரூ. 20 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.

உணவு மானியத்திற்கு ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு.

ரேஷன் கடைகளில் நவீன எடைபோடும் இயந்திரங்கள் வழங்க ரூ. 11.5 கோடி.

காவல்துறைக்கு ரூ. 2,136 கோடி ஒதுக்கீடு.

சிறைத் துறைக்கு ரூ. 96 கோடி ஒதுக்கீடு.

22 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

கூட்டுறவு சங்கங்களுக்கு மே-ஜூன் மாதங்களில் தேர்தல்.

விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் புதிய கூட்டுறவுக் கடன்கள்.

ஆஸ்திரேலிய, இஸ்ரேலிய விவசாய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+