விஜயகாந்த் ஒரு பச்சைக் குழந்தை: கருணாநிதி
சென்னை:விஜயகாந்த் ஒரு அரசியல் வரலாறு தெரியாத பச்சைக் குழந்தை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கேள்வி பதில் பாணியில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
கேள்வி: அண்ணா ஆரம்பித்த கட்சியில் குடிபுகுந்தவர் தான் கருணாநிதி என்று ஒருவர் கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: அப்படியா பேசியிருக்கிறார்? குடி உள்ளே புகுந்த காரணத்தால் அப்படி பேசியிருப்பார். பாவம், அரசியலில் பச்சைக் குழந்தைகளுக்குவரலாறு தெரியாது.
1945 ல் பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் இருந்த நான் 1949ல் அண்ணா சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கிய போதுஅதில் கழகப் பிரசாரக் குழு உறுப்பினராக இடம் பெற்றதும், அதுவரையில் திராவிட கழகத்தில் நான் இருந்ததும் வரலாறு என்பதை மயக்கத்தில்மறந்து விட்டார் போலும்.
கேள்வி: ம.தி.மு.க. கட்சிக்காரர் ஒருவரை ஹவாலா வழக்கில் கைது செய்திருப்பதை திமுக அரசின் பழிவாங்கும் செயல் என்று ஒருவர்கண்டித்துள்ளாரே?
கருணாநிதி: அதே ஹவாலா வழக்கில் திமுகவைச் சேர்ந்த மண்ணடி இதயத்துல்லா எனபவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது திமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிக்கை விடுத்துள்ளவர் அறியமாட்டார் போலும்.
கேள்வி: வெளிநாட்டிலிருந்து வரும் பெரிய தொழிற்சாலைகள் மோட்டாரோலா, நோக்கியா, சாம்சங், பிளக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல்என்றெல்லாம் பெயர் வைக்கிறார்களே, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி அந்த பெயர்களை கண்ணகி, கட்டபொம்மன் என்றுமாற்றி வைத்தால் என்ன என்று ஒரு நடிகர் கேட்டுள்ளாரே?
கருணாநிதி: இதைக் கேட்டு எப்படி சிரிப்பது, எதனால் சிரிப்பது என்று புரியாமல் அந்தக் கூட்டம் கலைந்திருக்குமே!
கேள்வி: சென்னையில் எம் சர்வீஸ் தொடங்கி பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தி விட்டதாக ஒரு நடிகர் பேசியுள்ளாரே?
கருணாநிதி: இந்த குற்றச்சாட்டை சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சுமத்தினார். அதற்கு அமைச்சர் நேரு ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்துதொடர்ந்து வருகிறது என்று பதிலளித்துள்ளார். பேருந்து கட்டணம் இந்த ஆட்சியில் உயர்த்தப்படவில்லை.
கேள்வி: வள்ளூவர் கோட்டத்து முகப்பில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணா நோன்பு போன்ற நிகழ்ச்சிக்காக அரசியல் கட்சிகளை அனுமதிப்பதால்அங்கே கூடுகிற கூட்டத்தில் சமூக விரோதிகள் சிலரால் வள்ளூவர் கோட்டத்தின் தூய்மையை கெடுகிறதே, அதனால் இனிமேல் அந்த இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுமா?
கருணாநிதி: இதுபோல் உருக்கமிகு கடிதங்கள் நூற்றுக்கணக்கில் வருகின்றன. பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
கேள்வி: திமுக தோழமை அணியில் உள்ள பா.ம.கவினர் சிலரும், திமுகவில் வெற்றி கொண்டான் போன்றவர்களும் தோழமை உறவுக்கு எதிராகபேசுவது, பேட்டி அளிப்பது பற்றி?
கருணாநிதி: இது போன்ற ஒரு பிரச்சனைக்கு இன்று பதில் கூறியுள்ள டாக்டர் அய்யா, தலைமையின் விருப்பத்துக்கு மாறாக சிலர்காரியமாற்றுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதே என் கருத்தும்.
கேள்வி: எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா எழுதும் அறிக்கையில் தாங்கள் ஒரு முதலமைச்சர் என்பதைக் கூட மறந்து அவமானச் சின்னம், கோழைஎன்று விமர்ச்சித்தும் தாங்கள் பொறுமையாக பதில் சொல்கிறீர்களே?
கருணாநிதி: அதே பாணியில் பதில் சொல்ல முடியாது என்பதல்ல. அநாகரீகமாக அர்ச்சிப்பவர்களை கண்டு பொறுமையாக ஒதுக்கிக் கொள்கிறேன்.அதே நேரத்தில் சொல்ல வேண்டிய பதிலையும் முறையாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications