சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா நேற்று காலை தொடங்கியது.
காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடந்தது. இதையடுத்து நெய்யபிஷேகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, பிம்பசுத்தி பூஜைகள் நடந்தன. பின்னர் தங்க மரத்தில் கொடியேற்றம் நடந்தது.
விழாவையொட்டி தினமும் இரவு 9 மணிக்கு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி பம்பையில்எழுந்தருளுகிறார். அன்றைய தினம் பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து சுவாமி கோவில் வந்தடைந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications