புதுவை அரசை கண்டித்து அதிமுக பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாய நிலங்களை ஆக்கிரமித்து துணை நகரம் அமைக்கும் புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி நடத்தும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மிகச்சிறிய பரப்பளவு கொண்ட யூனியன் பிரதேசம், இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான புதுவை அரசு சுமார் 900 ஏக்கர் விளை நிலங்களை அழித்து துணைநகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலங்களில் பெரும்பகுதி மூன்று போகம் விளையும் நிலங்கள் ஆகும். இவற்றை ஆக்கிரமிப்பதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, விவசாய கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.

இதனால் புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிடக்கோரி, புதுவை மாநில அதிமுக சார்பில் புதன்கிழமை பிற்பகல் புதுச்ேசரி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணாசிலையிலிருந்து பேரணி புறப்பட்டு ஆளுநர் மாளிகையை சென்றடையும்.

பின்னர் துணை நிலை ஆளுநரை சந்தித்து அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி மனு அளிக்கப்படும்.

இப்போராட்டத்திற்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார். கழக தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் பாலகங்கா, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலை வகிப்பர் என கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+