ராமதாஸ் பேச்சு: வெற்றி கொண்டான் வருத்தம்
சென்னை: டாக்டர் ராமதாஸ் குறித்து நான் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைமைக் கழக பேச்சாளர் வெற்றி கொண்டான் கூறியுள்ளார்.
சமீபத்தில் பார இதழ் ஒன்றுக்கு வெற்றி கொண்டான் படு காட்டமான பேட்டி அளித்திருந்தார்.அதில் திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்ச்சித்து வரும் ராமதாஸை மிகக் கடுமையாக வார்த்தைகளில் சாடியிருந்தார்.
ராமதாஸ் ஒரு பிளாக்மெயில் அரசியல்வாதி, மோசடித் தலைவர், அவரும் அவரது மகன் அன்புமணியுமாக சேர்ந்து கொண்டு கருணாநிதியின் இடத்தைப் பிடிக்க நினைக்கிறார்கள்,எப்போதும் பதவி ஆசையில் மிதக்கிறார் ராமதாஸ் என்றெல்லாம் மிகக் கடுமையாக கூறியிருந்தார்.
வெற்றிகொண்டானின் இந்தப் பேச்சு பாமக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி கொண்டானைக் கண்டித்து வட மாவட்டங்களில் ஆங்காங்ேக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சகட்டமாக சட்டசபையில் திரண்ட பாமக எம்எல்ஏக்கள் வெற்றிகொண்டனைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய தட்டிகளுடன் முதல்வர் அறை முன்பு தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் தனது பேச்சுக்கு வெற்றிகொண்டான் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் நான் அளித்த பேட்டி பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
தலைவர் கலைஞர் வருந்தும்படியாக என்னுடைய வார்த்தைகள் அமைந்திருந்தது, எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் தருகிறது.
ராமதாஸ் பற்றி நான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி, அவரது மனதை புண்படுத்தியிருக்குமானால் அதற்காக எனது வருத்தத்ைதத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வெற்றிகொண்டான்.












Click it and Unblock the Notifications