நண்பரைக் கொன்றதாக துபாயில் இந்தியர் கைது
துபாய்: நண்பரைக் கொன்று உடலை பாலைவனத்தில் புதைத்ததாக கேரளாவைச் சேர்ந்த வாலிபரை துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் கூறுகையில்,
கேரளாவைச் சேர்ந்தவர் அஹமது (43). இவரை மார்ச் 14ம் தேதி முதல் காணவில்லை என அவருடைய சகோதரர் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
கேரளாவை சேர்ந்த ஷைனி என்பவரும் அஹமதுவும் நண்பர்கள், சம்பவம் நடந்த அன்று இருவரும் நிறைய குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஷைனி மரக்கட்டையை எடுத்து அஹமது தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் அஹமது இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள பாலைவனத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து எரித்து விட்டார். பிறகு கேரளாவுக்குப் போய் விட்டார்.
இந்த விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள ஷைனிக்குப் போன் செய்து, அஹமதுவால் பிரச்சினை இல்லை என்று கூறி வரவழைத்தனர்.
தன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழவில்லை என நம்பிய ஷைனி துபாய் திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் வைத்து அவரைப் போலீஸார் கைது ெசய்தனர். பின்னர் அஹமதுவை எரித்த இடத்தையும் அவர் அடையாளம் காட்டினார்.












Click it and Unblock the Notifications