ரகசியமாய் மதுரைக்கு வந்துபோன கெளடா!

Subscribe to Oneindia Tamil

மதுரைகாவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா மதுரைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு, மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டுச் சென்றார்.

தேசிய அரசியலில் கெளாடவுக்கு முக்கியத்துவம் போய் விட்டது. அவராகவே அவ்வப்போது எதையாவது செய்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்கிறார்.

காவிரிப் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று கோரி நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பிக்கள் சமீபத்தில் கெளடா தலைமையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரதமரிடமும் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் கெளடா ரகசியமாக மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை கும்பிட்டு விட்டுப் போயுள்ளார். கர்நாடகக் கோவில்களை விட தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குத்தான் கெளாட அதிகம் வருவார்.

மதுரை, திருச்செந்தூர், பழனி என பல கோவில்களுக்கு வருவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களுக்கும் அவர் போயுள்ளார். அடிக்கடியும் வருவார். சிதம்பரத்திற்கும் அவர் வந்துள்ளார்.

புதுவை மாநிலத்திற்குட்பட்ட திருநள்ளாறு கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்தார் கெளடா. அதிகாலையில் வந்த அவருடன் மனைவி சென்னம்மாவும் உடன் வந்தார்.

இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர். கருவறையில் நின்றபடி இருவரும் நீண்ட நேரம் மனம் உருகி சாமி கும்பிட்டனர். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

கடந்த ஒன்றரை மாதத்தில் 3 முறை மதுரைக்கு வந்து விட்டார் கெளா.

கெளடாவின் மகனான கர்நாடக முதல்வர் குமாரசாமி 2 முறை மதுரைக்கும், திருச்செந்தூருக்கும் சமீபத்தில் வந்து சென்றது நினைவிருக்கலாம்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக பதட்ட நிலை நீடிப்பதால் கெளடவின் பயணம் மிகவும் ரகசியாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+