புலி ஆதராவளரிடம் விடிய விடிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயதக் கடத்தல் வழக்கில் சரணடைந்த பெரம்பலூர் பொறியாளர் ரமேஷ்குமாரிடம் கியூ பிரிவு போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

சமீபத்தில் பெரம்பலூரில் உள்ள ஒரு சோப்பு நிறுவனத்தில் கியூ பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நான்கு டன் இரும்புக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக அந்த குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், பொறியாளருமான ரமேஷ்குமார் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து அவரை தங்களது காவலில் போலீஸார் எடுத்தனர். அவரை திருச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து தீவிரமாக விசாரணை நடத்திய பின்னர் நேற்று சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கும், கடத்தல் கும்பல்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இந்தக் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே அருள்சீலன் (இவர் தான் முதலில் கைதானவர், இலங்கைத் தமிழர்), நகுலன், ராகுலன், பிரதீபன், பகீரதன், அந்தோணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+