ஈரானில் பூகம்பம் - உயரிழப்பு இல்லை
டெஹ்ரான்: ெதற்கு ஈரானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஈரானின் ெதற்கில் உள்ள பாம் என்ற பகுதியில், இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 என இது பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்ைல.
கடந்த 2003ம் வருடம் பாம் நகரில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 31,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி அலைத் தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்:
ஜப்பானில் இன்று 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
நோடா தீபகற்பத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நேற்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியான ஆப்டர்ஷாக்தான் என்றாலும் கூட இதன் அளவு 5.2 ரிக்டராக இருந்தது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
மக்கள் பீதியில் கடலோர பகுதிகளில் இருந்து மேடான இடத்திற்கு ஓடினார்கள்.












Click it and Unblock the Notifications