தமிழகத்தில் வேகமாக பரவும் சின்னம்மை
சென்னை: சிக்கன்பாக்ஸ் என்று அழைக்கப்படும் சின்னம்மை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில்தான் அதிகம் பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெரிசல்லா என்ற வைரஸ் மூலம் பரவுவது சின்னம்மை. பெரும்பாலும் குழந்தைகளைத்தான் தாக்கும். ஒருமுறை வந்து விட்டால், பின்னர் மீண்டும் வராது.
முன்பெல்லாம் சின்னம்மை பரவல் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது இதன் பரவல் மற்றும் தாக்கம் குறைந்துள்ளது. தற்போது பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் சின்னம்மை பரவி வருகிறது. தமிழகத்திலும் இப்போது சின்னம்மை வேகமாக பரவி வருகிறது.
சென்னையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் தினசரி பலர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 500 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனராம்.
இது குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குனர் பத்மநாபன் கூறுகையில்,
சின்னம்மை பாதித்தவர்கள் ஊசி போட தேவையில்லை. ஏசைக்ளோவீர் எனப்படும் மாத்திரையை 5 நாட்கள் சாப்பிட்டால் போதும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.
இதன் விலை 9 ரூபாய் ஆகும். மொத்தம் 80 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். தடுப்பூசியும் உள்ளது. அதன் விலை ரூ.1200.
நோய் பாதிக்கப்பட்டவுடன் சிகிச்சை பெற வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
சென்னை தவிர மொத்தம் 15 மாவட்டங்களில் சின்னம்மை பரவியுள்ளாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications