காவிரி: சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை:காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையிலிருந்து இன்று அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாரா என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் எழுந்து சில கருத்துக்களை வெளியிட்டார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சிவபுண்ணியம் பேச்சுக்கு விளக்கம் அளிக்க பன்னீர் செல்வம் முயன்றார்.
ஆனால் அதை அனுமதிக்க மறுத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன். இதையடுத்து சபாநாயகரின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் உள்ளே வந்து அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications