ராமதாஸின் உள்நோக்கம்: அன்பழகன் சாடல்
சென்னை: 60 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது இழிவான குற்றச்சாட்டைக் கூறியிருப்பதன் மூலம் தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதை டாக்டர் ராமதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான க.அன்பழகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு, அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பேசியும், பழகியும், பல கட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார்.
அவரது அரசியல் ஆளுமையில் உள்ள பண்பாட்டையும், நாகரீகத்தையும் எவரும் அறிவர். எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலகட்டங்களில் கூட எந்த ஒரு தலைவரையும், மரியாதைக் குறைவாகவோ, நாகரீகமற்ற முறையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது.
வார இதழில் வெற்றி கொண்டான் பேட்டி கொடுத்தது குறித்து, பெரிதும் வருத்தப்பட்டதோடு, வெற்றி கொண்டானோடு தொடர்பு கொண்டு உடனடியாக அவர் கொடுத்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கச் சொல்லி, முதல்வர் கருணாநிதிதான் அறிக்கை விட வைத்தார்.
ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், வெற்றி கொண்டான் வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு , வெளியிடப்பட்டதே என்று கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்த இழிவான கற்பனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் இத்தனை ஆண்டுகள் பழகியும், அவருடைய அரசியல் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் தெரிந்து கொள்ளாமல் , கலைஞர் மீது குற்றம்சாட்டியிருப்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன்.
டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது, உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார் அன்பழகன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications