சபாநாயகரை முற்றுகையிட்டு அதிமுக போராட்டம்
சென்னை:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்தால் கோபமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் ஆவுடையப்பனின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏவும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான ராஜா பேசுகையில், ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களைக் கூறினார்.
அதைக் கேட்டதும் அதிமுகவினர் கொந்தளித்தனர். செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு முற்றுகையிட்டு ராஜா பேசிய வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி கோஷமிட்டனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது கையில் இருந்த பட்ஜெட் உரையை தூக்கிப் போட்டு ஆவேசமாக பேசினார்.
அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் எழுந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ராஜா பேசிய வாசகங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக கூறினார்.
அந்த சமயத்தில் எழுந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதிமுகவினர் பேசிய வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்றாலும் கூட அவர்கள் பேசிய விதம், அவையின் மரபை மீறும் வார்த்தைகள் ஆகும். எனவே இதை அனுமதிக்கக் கூடாது என்று கோரினார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர், அவையின் மாண்பு, மரபு விதிகளை மீறும் வகையில் பேசக் கூடாது என்று அதிமுகவினரை எச்சரித்தார்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. 22 வயதில் இளம் நடிகை எடுத்த விபரீத முடிவு! -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications