ஜெயலலிதாவிற்கு கருப்புக்கொடி: கராத்தே
சென்னை:
அதிமுக தலைமக் கழக அலுவலகத்துக்கு ஜெயலலிதா வரும்போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவோம், அவரது கொடும்பாவியை எரிப்போம் என ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து துரத்தப்பட்டு பின்னர் காங்கிரஸில் இணைந்த முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவரும், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜூம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததை குறித்து வெளியிட்ட கருத்துக்கு தான் நடத்தும் முதியோர் இல்லத்தின் மூத்த பிரதிநிதி ஆன சுலோச்சனா சம்பத்தின் பெயரால் ஒரு பதில் அறிக்கை கொடுத்து அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார் ஜெயலலிதா.
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சண்டையில் வேஷ்டி கிழிகிறது எனக் கூறியுள்ளார் சுலோச்சனா சம்பத்.
தேனி மாவட்டத்தில் தினகரன் கோஷ்டியினரும், மகாதேவன் கோஷ்டியினரும் சண்டைபோட்டு மண்டையை உடைத்துக்கொள்ளும் மகத்துவம் அதிமுகவின் தனித்துவம்.
மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி சிந்திய ரத்தத்தால் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியை ஏளனம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை கிடைக்க செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை அவர் மறந்துவிட்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது எல்லோரும் ஓடி விட்டார்கள் எனக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் மூப்பனார், ஜெயந்தி நடராஜன் ஆகியோருடன் நானும் அவரது உடலை எடுத்து வந்தோம் என்பதை உலகம் அறியும். இப்படி இவர் கூறுவது கட்சியையும், காலஞ் சென்ற தலைவர்களையும் களங்கப்படுத்துவதாகும்.
மத்திய அமைச்சர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் தொடருமேயானால் ஜெயலலிதா அவரது கட்சி அலுவலகத்திற்கு வரும்போது கொடும்பாவி எரிப்பு, கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications