மனைவியை அயர்ன் செய்த கொடூர கணவன்
சென்னை:வரதட்சணை கேட்டு மனைவி உடலில் இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டுக் கொடுமை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். கணவரின் சகோதரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உமர். இவரது மகள் முபீனா பேகம். இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
ஷாநவாஸ், புளியந்தோப்புப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கல்யாணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த ஷாநவாஸ்-முபீனா பேகம் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை எழுந்தது.
கூடுதல் வரதட்சணை கேட்டு முபீனாவை அடிக்கத் தொடங்கினார் ஷாநவாஸ். அவருடன் சேர்ந்து நவாஸின் அக்கா, அவரது கணவர், அண்ணன், அவரது மனைவி ஆகியோரும் முபீனா பேகத்தை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதில் உச்சகட்டமாக, இஸ்திரி பெட்டியால் முபீனாவின் உடலில் பல இடங்களில் சூடு போட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார் நவாஸ். இதனால் கதறித் துடித்த முபீனா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தந்தைக்குப் போன் செய்து அழுதுள்ளார்.
துடித்துப் போன முபீனாவின் தந்தை விரைந்து வந்து தனது மகளை கூட்டிச் சென்றார். நேராக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்ற இருவரும் அங்கு புகார் கொடுத்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், நவாஸின் அண்ணன் மனைவி ஷபானா, அக்கா ஷாகின், அவரது கணவர் சலீம் ஆகியோரைக் கைது செய்தனர். நவாஸ் தலைமறைவாகி விட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications