ஜட்டி ரவி சமூக நீதி டிஐஜி ஆனார்!
சென்னை:நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து, குற்றாலத்தில் குடித்து விட்டு, ஜட்டியுடன் பொதுமக்களிடம் ரகளை செய்து, பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி ரவி, சமூக நீதி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ரவி. குற்றாலத்தில் அவர் குடித்து விட்டு அருவிக்குக் குளிக்க வந்தவர்களிடம் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தடுக்க வந்த போலீஸாரையும் அவர் தாக்கினார்.
இதையடுத்து ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சமூக நீதி டிஐஜி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவர் பணியில் சேரவுள்ளார்.
இதேபோல, கூடுதல் டிஜிபிக்கள் ராஜேந்திரன், நடராஜன் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் சென்னை நகர கூடுதல் காவல் ஆணையராக இருந்தவர். நடராஜன் ஆணையராக இருந்தவர்.
தற்போது டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரன், பதவி உயர்வுக்குப் பின்னர் சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தற்பாது மின்சார வாரிய விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் டிஜிபி ஆக உள்ள நடராஜன், அதே பிரிவில் டிஜிபி ஆக செயல்படுவார்.
சிபிசிஐடி ஐஜி சேகர், சிறைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆக உள்ள பாலச்சந்திரன், காவல் பயிற்சி பிரிவு கூடுதல் டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
காவல் பயிற்சிப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராமானுஜம், டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications