விற்பனையைப் பொறுத்தே டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்
துரை: மது விற்பனையை அதிகரிப்பதைப் பொறுத்தே டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் 34,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ.1500 முதல் ரூ.3000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத் தொகையையும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விற்பனையை அதிகரிக்கும் கடை ஊழியர்களுக்கு மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும் என அரசு திடீரென உத்தரவு போட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் அபுபக்கர், சித்திக், ஸ்ரீரங்கநாதன் கூறுகையில்,
டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் 3 வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து வரும் எங்களுக்கு இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை வருடத்தில் எல்லா நாட்களும் வேலை செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிக அளவில் இருந்தால்தான் ஊக்கதொகை என்று அரசு தற்போது அறிவித்துள்ளது.
டாஸ்மாக் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடி வருமானம் வருவதாகவும் அதை வைத்துதான் இலவச டிவி வழங்குவதாகவும் முதல்வரே கூறிபிட்டுள்ளார்.
இதனால், ஊக்கதொகை பிரச்சனை, பணி நிரந்தரம், அரசு ஊழியருக்கு இணையான சம்பளம், சலுகை, சட்டப்படியான வேலை நேரம், விடுமுறை, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 31ம் தேதி சிஐடியு சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடக்கிறது என்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications