பார்ட் டைம் விபச்சாரம்: 4 இல்லத்தரசிகள் கைது
சென்னை:கணவர், குழந்தைகளுக்குத் தெரியாமல் பகுதி நேரமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நான்கு குடும்பப் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை சுலைமான் என்பவர் நடத்தி வருகிறார். கீழ்த்தளம் தவிர இரண்டு மேல் தளங்களைக் கொண்டது இந்தக் கட்டடம்.
அதில், கீழ்த்தளம் மற்றும் 2வது தளத்தில் டிராவல்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. முதல் தளத்தில் சுலைமான் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இதில் 2வது மாடியில் டிராவல்ஸ் நிறுவனம் இல்லை. அதற்குப் பதில் அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். 2வது மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடப்பது போலத் தெரியவில்லை. அதற்குப் பதில் அங்கு நான்கு அறைகளும், படுக்கைகளும் இருந்தன.
நான்கு பெண்களும் அங்கு பம்மியிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்களின் பெயர்கள் லட்சுமி (29), செல்வி (31), பஞ்சலோகம் (30), செல்வி (30) என்பது தெரிய வந்தது. அனைவரும் கல்யாணமாகி, கணவர், குழந்தைகளுடன் வசித்து வரும் குடும்பம் நடத்தி வரும் குடும்பப் பெண்கள் எனத் தெரிய வந்தது.
தங்களது சுய பணத் தேவைக்காகவும், பொழுது போக்குக்காவும் இவர்கள் பகுதி நேரமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் சுலைமானை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கைதான குடும்பப் பெண்களைக் காண நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications