காவிரி பந்த்-ஸ்தம்பித்தது ஈரோடு
ஈரோடு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை திருத்தக் கோரியும், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரள அரசைக் கண்டித்தும் ஈரோடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில், கேரள மாநிலத்துக்கு, தமிழகத்தின் பவானி ஆற்றிலிருந்து 6 டிஎம்சி நீரும், அமராவதியிலிருந்து 3 டிஎம்சி நீரும் என மொத்தம் 9 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பவானி பாசனப் பகுதியில் திறந்து விடப்படும் நீரின் அளவையும் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவிரி தீர்ப்பை திருத்த வேண்டும் எனக் கோரியும், சேலம் கோட்டத்திற்கு இடையூறு செய்யும் கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்படது.
பல்வேறு வர்த்தக சங்கங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்டவை இதற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பஸ் போக்குவரத்து நடக்கவில்லை. ஆட்டோக்கள், டாச்சிகளும் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
சில பள்ளிகளில் இன்று தேர்வுகளும் கூட ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தையொட்டி ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications