குடும்ப பிசினஸைப் பெருக்கவே இலவச டிவி: ஜெ.
திமுக அரசு தன் குடும்ப வருவாயைப் பெருக்கவே இலவச கலர் டிவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
இலவச வண்ணத் தொலைகாட்சி வழங்கும் திட்டம் உண்மையில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக இல்லை. இதற்காக செலவிடப்படும் நிதி மக்களின் துயர் துடைப்பதற்காக இல்லை.
இந்த திட்டம் ஆளும் திமுக குடும்பத்தினரின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டம். அவர்களுடைய தொழில் விரிவாக்கத்திற்காக பயன்படுத்தப்படும் திட்டம்.
இந்த திட்டம் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் நாம் ஒரு உண்மையை மறந்து விடக் கூடாது. இதன் மூலம் தொலைக்காட்சி சானல்களை நடத்தி வரும் திமுகவின் குடும்பத்திற்கு அதிக வருவாய் ஈட்டமுடியும். இந்த தொலைக்காட்சிகள் மூலம் கேபிள் டிவிக்கு அதிக இணைப்புகள் கிடைப்பதால் அதிக வருமானம் கிடைக்கும்.
ஒரு இணைப்புக்கு ரூ.100 என்றால் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு வருடத்திற்கு ரூ.1200 கோடி இந்த திட்டம் மூலம் கிடைக்கும். ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டியின் விலை. ரூ.3000. ஆனால், இதை வாங்கும் பயனாளிகள் இந்த டிவியை 3 வருடத்திற்குள் இதை விட அதிக விலைக்கு விற்க முடியும்.
சட்டசபையில் எதிர்கட்சிகள் பேச போதிய நேரம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியே பேசினாலும் இடையூறுகள், அவமதிப்பு, மோசமான வார்த்தைகள். அதனால்தான் நான் பேச வேண்டிய கருத்துகளை இப்படி அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.
இந்த பட்ஜெட் மூலம் திமுக அரசு மக்களை பலவகையிலும் ஏமாற்ற முயன்றுள்ளது. மக்கள் அதிருப்தி அடையும் வகையில் உள்ளது.
கூட்டுறவு வங்கி மூலம் ரூ.7,000 கோடி விவசாய கடன் வழங்க போவதாக அறிவித்துள்ளனர்.ஆனால் முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு மட்டும் மீண்டும் கடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பல கூட்டுறவு வங்கிகள் செயல்பட முடியாத அளவுக்கு பண நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ரிசர்வ் வங்கி, நிரந்தர சேமிப்பு பணங்களை திரும்ப கொடுக்க முடியாமல் அதை மீண்டும் புதுப்பிக்க சொல்லி வற்புறுத்துகிறது. இந்நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த நிதியாண்டில் 54 லட்சம் ஏக்கரில் 78 லட்சம் டன் உணவு உற்பத்தி மட்டும் நடந்துள்ளது. மேட்டூரில் தொடர்ந்து 100 அடியாக தண்ணீர் இருந்து உணவு உற்பத்தி குறைவாக இருப்பது இதற்காக அரசு சரியான முயற்சி எடுக்காததையே காட்டுகிறது.
விவசாயிகளுக்கு சரியான திட்டங்கள் இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறி 50 லட்சம் அரசு தரிசு நிலம் இருப்பதாகவும் சொன்னார்கள். நான் அப்போதே இல்லை என்று சொன்னேன்.
இப்போது 77,117 ஏக்கர் நிலத்தை மீட்டு 71,755 விவசாயிகளுக்கு வழங்கியிருப்பதாக கூறியுள்ளனர். இந்த விஷயத்திலும் ஏமாற்றி வருகிறார்கள்.
ரூ.2 அரிசி வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தபடவில்லை. தரமான அரிசியாக இல்லை. மாட்டு தீவனமாகத்தான் அதைப் பயன்படுத்தலாம். இந்த ரேஷன் அரிசிதான் கள்ளச் சந்தைக்கு போகின்றன.
நுழைவுத் தேர்வு இல்லாமல் உயர் கல்வியில் மாணவர்களை சேர்க்கும் விஷயத்திலும் குழறுபடிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 2 மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான ஆசிரியர் நியமனம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அப்படி இருக்கையில், மாணவர் சேர்க்கை எப்படி சாத்தியமாகும்.
காவிரி முல்லை பெரியாறு பிரச்சனைகளில் அரசு எந்த தீவிரமும் காட்டவில்லை. இதனால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினையில் அரசு இரட்டை வேடம் போடுகிறது. தீர்ப்பு வந்து 2 மாதங்களாகியும், இந்தப் பிரச்சினையில் தமிழ அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆமை வேகத்தில் கூட அது செல்லவில்லை.
தனது பாணியில் வழக்கம் போல மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறு. நடுவர் மன்றத் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டால், அதில் இடம் பெற்றுள்ள குறைந்தபட்ச பலனையாவது நமது விவசாயிகள் பெற முடியும்.
இல்லாவிட்டால் தீர்ப்பில் உள்ளபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் என்று நம்ப முடியாது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை மாற்று பெயரில் அறிவித்துள்ளனர்.
நிதி மேலாண்மையில் ஏராளமான குறைகள் உள்ளன. அதனால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். நீண்ட கால திட்டங்களும் இல்லை. நிர்வாக திறமையின்மையால் மாநில வளர்ச்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் அவர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications