பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு அறிவுத் திருக்கோவிலில் பாராட்டு
பொள்ளாச்சி: மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் பாராட்டு விழா நடந்தது.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் வரவேற்றார். பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார் விழாவிற்கு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ராமசாமி அடிகளார் பேசுகையில், மனித பிறவி எடுத்ததன் பயனை அடைய சிலர் மட்டுமே முயற்சி எடுக்கின்றனர். அத்தகையவர்கள் பண்புடையவர்களாகின்றனர்.
மனித சமுதாயத்தில் அறநெறி பண்புடையவர் தொழிலதிபர் மகாலிங்கம். அவரது வாழ்நாளை, பண்பாடு, அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளை அமைத்து கொடுக்க செலவிட்டுள்ளார்.
பக்தி நெறியும் கல்வி சேவையும், சமூக பார்வையும் ஒரு சேர பெற்று மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்றார்.
அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல் பேசுகையில்,
வள்ளலார் வழியில் நின்று தொழில், வணிகம், கல்வி, இலக்கியம்,விவசாயம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.
85 வயதிலும் இளைஞரைபோல் செயலாற்றி தென் மாநிலங்களில் உள்ள கோவில்களின் பெருமையை வட மாநிலங்களிலும் பிரபலப்படுத்த காசியில் கோவில் வளாகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்.
நாட்டு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் அவரது வாழ்க்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும என்றார்.
சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில்,
தொழிலதிபர் மகாலிங்கத்தின் வாழ்க்கை எல்லோரும் பின்பற்றக்கூடியதாக உள்ளது. அவர் தனிப்பட்ட மனிதனாக இல்லாமல் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறார்.
இந்தி எதிர்ப்பு காலத்திலேயே மும்மொழி கொள்கையை ஆதரித்தவர். அவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம் என்றார்.
ஆழியாறு அறிவுத்திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் பாலசுப்ரமணியம் பேசுகையில், எல்லோராலும் எல்லாத்துறைகளிலும் சாதிக்க முடியாது, ஆனால் மகாலிங்கம் அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் சாதித்து வருகிறார்.
ஆட்சியாளர்களுக்கே திட்டங்கள் வகுத்து கொடுக்கும் திறன் பெற்றுள்ளார். நதி நீர் இணைப்பு பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியலில் இருந்து விலகியது நாட்டுக்கு பெரிய இழப்பாகும் என்றார்.
பின்னர் மகாலிங்கம் ஏற்புரையாற்றினார். அறிவுத்திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி நன்றி கூறினார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications