உல்மர் கொலையில் தாவூத் இப்ராகிம் தொடர்பு?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் கொலையில், தாவூத் இப்ராகிமுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பாப் உல்மர் கொலை தொடர்பாக இன்னும் தெளிவான விளக்கத்தை ஜமைக்கா போலீஸார் தெரிவிக்கவில்லை. பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சூதாட்டமே உல்மரின் கொலைக்கு முக்கிய காரணம் என தற்போது வலுவாக நம்பப்படுகிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கும், உல்மருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
அந்த சூதாட்டக்காரர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவர் தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வந்திருந்ததாகவும் லண்டனிலிருந்து வரும் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, சூதாட்ட புகாரில் சிக்கி இந்திய சிறையில் இருக்கும், தாவூதின் முன்னாள் கூட்டாளியான பப்லு ஸ்ரீவஸ்தவாவும், தாவூத்தான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் சூதாட்ட புரோக்கர்களுடன் ஜாமைக்கா சென்றிருந்ததாக கூறப்படுவதால் இந்த கொலையில் தாவூத் இப்ராகிமுக்கு நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த கோணத்தில் ஜாமைக்கா போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications